என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுப்பெண் மர்ம மரணம்"
- திருமணமான 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- ரமணி இறந்தது குறித்து, அவரது கணவர் சஞ்சய் மற்றும் ரமணியின் தந்தை கருப்புசாமி, சஞ்சயின் தாய், தந்தை ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
வடவள்ளி:
கோவை மத்வராயபுரத்தை சேர்ந்தவர் சஞ்சய் (22). இவரும் செல்வபுரத்தை சேர்ந்த ரமணி (20) என்பவரும் காதலித்து வந்தனர்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதலர்கள் கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர்.
இதையடுத்து போலீசார் 2 வீட்டு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரமணி காதல் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தால் அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் இருந்த ரமணி, தனது கணவரிடம் தலைவலிப்பதாகவும், சிறிது நேரம் தூங்கி விட்டு வருகிறேன் என தெரிவித்து விட்டு அறைக்கு சென்றுள்ளார்.
இரவு சாப்பிடுவதற்காக சஞ்சய் ரமணியை அழைக்க சென்றபோது, அவர் மூச்சு பேச்சின்றி இருந்தார். அதிர்ச்சியான சஞ்சய் மனைவியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே திருமணமான 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டு, கழுத்தில் காயங்கள் இருப்பதால், ரமணியின் சாவில் மர்மம் இருக்கிறது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து உறவினர்கள் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர். அதன் பின்னர் ரமணியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படது.
திருமணமான 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்ததால் இதுகுறித்து கோவை தெற்கு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
ரமணி இறந்தது குறித்து, அவரது கணவர் சஞ்சய் மற்றும் ரமணியின் தந்தை கருப்புசாமி, சஞ்சயின் தாய், தந்தை ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
அப்போது அவர்களிடம் ரமணி எப்படி இறந்தார். அதற்கான காரணம் என்ன என்பன உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டார்.
ரமணியின் இறப்பில் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. முதலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்தனர்.
ஆனால் அவரது கழுத்தில் சிறிது அடி ஆழத்திற்கு பலமான காயமும், கையிலும் தாக்கியதற்கான காயங்கள் உள்ளது.
இதனால் அவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை. மேலும் கழுத்து, கைகளில் எப்படி காயம் ஏற்பட்டது என்பதும் புரியாத புதிராக உள்ளது.
இப்படி புதுப்பெண் சாவில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் இந்த மர்மங்களுக்கு எல்லாம் விடை கிடைக்கும். அதில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதாவது நடந்துள்ளதா? என்பது தெரியவரும்.
- இரவு சாப்பிடுவதற்காக சஞ்சய் ரமணியை எழுப்ப சென்றார்.
- இளம்பெண்ணின் உடலில் கழுத்து மற்றும் கைகளில் காயம் இருந்தது.
வடவள்ளி:
கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி (வயது 20). இவர் கோவை பேரூரில் உள்ள கல்லூரியில் பி.காம் சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கோவை மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சஞ்சய் (20). இவரும் ரமணி படித்த கல்லூரியில் படித்தார். ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்ததால் 2 பேருக்கும் இடையே நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் ரமணியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சஞ்சயுடன் பழகுவதையும், பேசுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வீட்டில் இருந்த ரமணி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரமணி, தனது காதலனான சஞ்சயுடன் வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணிக்கு சென்றதும், அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் காதல் ஜோடியினரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கூறியிருந்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
மேலும் காதல் ஜோடியினரின் பெற்றோரும் வந்திருந்தனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வாலிபரின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் பெண்ணின் பெற்றோர் ஏற்க மறுத்து சென்று விட்டனர்.
இதையடுத்து போலீசார் காதல் ஜோடியினரை, வாலிபரின் பெற்றோருடன் அனுப்பினர்.
கடந்த 24-ந் தேதி ரமணிக்கும், சஞ்சய்க்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ரமணியை அவரது தந்தை கருப்புசாமி போனில் தொடர்பு கொண்டு உனது துணிகளை வாங்கிக்கொண்டு செல் என கூறியுள்ளார். அதற்கு ரமணி, எனக்கு வேலை இருப்பதால் மற்றொரு நாள் வந்து வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த கருப்புசாமி மகள் என்றும் பாராமல் அவரை திட்டியுள்ளார். இதனால் ரமணி கடந்த சில நாட்களாக மன உளைச்சலிலேயே இருந்துள்ளார். கணவர் அவருக்கு ஆறுதல் கூறியும் அவர் சரியாகவில்லை என தெரிகிறது.
ரமணி தொலைதூர கல்வியில் பாதியில் விட்ட படிப்பை தொடர விரும்பினார். இதற்காக நேற்று கணவன், மனைவி 2 பேரும், தொண்டாமுத்தூர் கல்லூரிக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் மாலையில், வீட்டில் இருந்த ரமணி தனக்கு தலைவலிப்பதால் சற்று நேரம் ஓய்வெடுக்கிறேன் என கூறிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.
இரவு சாப்பிடுவதற்காக சஞ்சய் ரமணியை எழுப்ப சென்றார். ஆனால் அவர் எழுந்து இருக்கவே இல்லை. மேலும் மூச்சு பேச்சின்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சியான அவர் மனைவியை தூக்கிக்கொண்டு பூலுவப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் சஞ்சய் கதறி அழுதார். இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பார்வையிட்டனர். அப்போது இளம்பெண்ணின் உடலில் கழுத்து மற்றும் கைகளில் காயம் இருந்தது.
இதையடுத்து போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இளம்பெண் உடலில் காயங்கள் இருப்பதால் அவரை யாராவது அடித்தனரா? அல்லது இளம்பெண் தந்தை திட்டிய விரக்தியில் தற்கொலை செய்து கொண்டரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரது சாவில் மர்மம் நீடித்து வருகிறது.
இளம்பெண்ணின் மர்மச்சாவு குறித்து ஆலாந்துறை போலீசார் இளம்பெண்ணின் பெற்றோர், கணவர் ஆகியோரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
திருமணம் ஆகி 21 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறையை அடுத்த ராதா நல்லூரை சேர்ந்த குழந்தைவேல் என்பவர் மகள் ரம்யா (வயது 33). இவருக்கும், தலைஞாயிறு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த ரம்யா நேற்று மாலை கணவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரின் பேரில் மணல் மேடு (பொறுப்பு ) இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து ரம்யா சாவில் மர்மம் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ரம்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்.
ரம்யா திருமணமான 2 மாதத்தில் மர்மமான முறையில் இறந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமணமான 2 மாதத்தில் புதுபெண் மர்மமாக இறந்த சம்பவம் தலைஞாயிறில் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள காடபாளையத்தை சேர்ந்தவர் தமீன் அன்சாரி. இவரது மனைவி யாஸ்மின் (வயது 24).
இவர்கள் 2 பேரும் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர்கள். இருவரும் காதல் செய்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பை மீறி அவர்கள் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்தனர். பின்னர் அவர்கள் பெருந்துறைக்கு வந்து காடபாளையத்தில் தங்கி இருந்து குடும்பம் நடத்தினர்.
தமீன் அன்சாரி செல்போன் கடையிலும், யாஸ்மின் செருப்பு கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலூரில் உள்ள யாஸ்மினின் தாய்க்கு தமீன் அன்சாரி போன் செய்தார். ‘‘உங்கள் மகள் அதிக வயிற்று வலியால் எலி மருந்து சாப்பிட்டு விட்டார். நான் பெருந்துறை ஐ.ஆர்.டி. ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளேன்’’ என்று கூறினார்.
இதையடுத்து யாஸ்மினின் தாயார் மேலூரில் இருந்து பெருந்துறைக்கு வந்தார். யாஸ்மினை கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி யாஸ்மின் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீஸ் டி.எஸ்.பி. ராஜகுமார் வழக்குப்பதிவு செய்தார்.
யாஸ்மின் மர்மமாக இறந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. யாஸ்மினுக்கு திருமணமாகி 2 மாதமே ஆவதால் அவரது சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்